தனுசு அன்பர்களே உங்களது ராசிக்கு 2ம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வை, 6 ஆம் வீடு, 8 ஆம் வீடு, 10 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 6 ஆம் வீடு என்பது நோய், கடன், எதிரிகள் ஆகியவற்றையும், 8 ஆம் வீடு எதிர்பாராத ஆதாயங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றையும், 10 ஆம் வீடு என்பது வேலை, செயல்கள், கௌரவம் ஆகியவற்றையும் குறிக்கிறது.

வேலை, தொழில், குடும்பம், செல்வம், சொத்து ஆகியவற்றிற்கு நன்மையளிக்கும் விதமாக இந்த குரு பெயர்ச்சி அமைந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பினால் ஒற்றுமை ஓங்கும். எந்தப் பிரச்னையையும் நாசுக்காக கையாள்வீர்கள் நீங்கள். செல்வம், சொத்து ஆகியவற்றை உங்களால் சேர்க்க முடியும். திடீர் ஆதாயங்கள், எதிர்பாராத பண வரவுகள் வரலாம். சிலருக்கு பரம்பரை சொத்துக்கள் வந்து சேரும். குடும்பம் அல்லது பரம்பரை சொத்துக்கு சட்டப்படியான வாரிசாகின்ற நிலை வரலாம். இது நிறைவே சிறிது கால தாமதம் ஆகும்.

உங்களது தீவிர முயற்சியால் வேலையில் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி இடமாற்றத்திற்கான வாய்ப்பு பிரகாசமாகலாம். பல சவாலான பணிகளை செய்து பெயர் பெறும் காலம் இது. கௌரவம், புகழ், அதிகாரம் வந்து சேரலாம். உங்கள் செயல்களுக்கு குறைந்த காலத்திலேயே எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பரம்பரை சொத்து உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. என்றாலும் புதியதாக சொத்துக்கள் எதையும் வாங்கும் யோகம் இப்போதைக்கு இல்லை. வீடு, நிலம் வாங்குவதோ, விற்பதோ போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாகனம் வாங்குவதிலும் இதே நிலை தான். வீட்டை புதுப்பித்தல், வாகனங்களை அடிக்கடி சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

வேலை, தொழில்

அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றி முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினர் நீங்கள் முன்னேற உதவிகரமாக இருப்பார்கள். மிகத் திறமையாக செயல்பட்டு உற்பத்தி திறனை பெருக்கிக் கொள்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுமாரான பலன்களையே தருகிறது இந்த குரு பெயர்ச்சி. தொழில் போட்டி அதிகம் இல்லையென்றாலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இப்போது கிடைக்காமல் போகலாம். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்துவது நல்லது.

நிதி

வருமானம் பெரியளவில் இருக்க இப்போது வாய்ப்பில்லை. தொழிலில் லாபம் அதிகரிக்கவும் நல்ல சூழல் இல்லை. நிதியையும், செலவுகளையும் கவனமாக கையாள வேண்டிய காலமிது. பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். வாகனங்களை பழுது பார்ப்பதற்காக அடிக்கடி செலவிட நேரிடலாம். பணம் மற்றும் சேமிப்பின் மதிப்பை உணர்ந்து கவனமாக கையாள வேண்டிய வேளை இது.

குடும்பம்

சுமூகமான குடும்ப உறவுகள் அமையும். தேவையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்பார்கள் குடும்பத்தினர். கருத்து வேறுபாடுகளை களைய தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தாய் ஸ்தானத்தில் இருப்பவர்களிடம் கவனம் தேவை. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினரோடு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

கல்வி

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. தீய சகவாசங்களை விலக்கி, மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் வாயிலாக சிறப்பான பலன்களை பெறலாம். கல்வி விஷயத்தில் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

காதலும், திருமண வாழ்க்கையும்

பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கக்கூடிய பொற்காலம் இது தனுசு ராசி காதலர்களுக்கு. சில தடைகளை எதிர்கொண்டாலும் திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் விடா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தம்பதியர்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கணவன், மனைவி இடையே பிரச்னைகள் தோன்றினாலும் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால் சிறப்பு.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் ஆரோக்கியமும் நலமாக இருக்கும். வீட்டிலுள்ள பெரியவர்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது. அவர்களது ஆரோக்கிய பாதுகாப்பு மீது எச்சரிக்கை அவசியம்.

எளிய பரிகாரங்கள்

பகவான் விஷ்ணுவையும், சிவபெருமானையும் வழிபடவும்.

மஞ்சள் நிற மாணிக்கக் கல்லை (ஸபையர்) வலது கை ஆள்காட்டி விரலில் அணியலாம்.

தங்கள் கணவரிடம் பெண்கள் அதிக அன்பையும், மரியாதையும் காட்டவும்.

மூத்த உடன் பிறப்புகளோடு இணக்கம் காட்டுவது நல்லது.

குழந்தைகளிடம் அன்பையும், பாசத்தையும் காட்டுங்கள்.

மஞ்சள், குங்குமம், தங்க நகைகள் அல்லது தங்க நிற நகைகள், பருப்பு வகைகள், மஞ்சள் துணி, உப்பு, சுத்தமான நெய், மஞ்சள் பூக்கள், புஷ்பராகம், புத்தகங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு தானம் செய்யவும். மேலும் பலன்கள் மற்றும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள : https://www.astroved.com/tamil/specials/guru-peyarchi-palangal/

Author's Bio: 

வேலை, தொழில், குடும்பம், செல்வம், சொத்து ஆகியவற்றிற்கு நன்மையளிக்கும் விதமாக இந்த குரு பெயர்ச்சி அமைந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பினால் ஒற்றுமை ஓங்கும். எந்தப் பிரச்னையையும் நாசுக்காக கையாள்வீர்கள் நீங்கள்.